Skip to main content

Posts

Showing posts from 2017

பூமி என்னும் சொர்க்கம்: டைனோசர்கள் அழிந்தது ஏன்?

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா என்ற சூப்பர் கண்டம் இருந்தது. உலகின் எல்லா கண்டங்களும் ஒன்றாகச் சேர்ந்து இருந்ததால் அதற்கு சூப்பர் கண்டம் என்று பெயர். அந்த சூப்பர் கண்டத்தில் டைனோசர்கள் வாழ்ந்தன . அது மனிதன் தோன்றாத காலம். அப்போது டைனோசர்கள்தான் உலகில் ஆதிக்கம் செலுத்தின . டைனோசர் என்றால் ’ பயங்கரமான பற்களைக் கொண்ட பல்லி’ என்று அர்த்தம். இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் ஓவன் 1842-ம் ஆண்டில் அந்தப் பெயரை வைத்தார். ஆனால் அது பொருந்தாத பெயர் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் டைனோசர்களில் கோழிக்குஞ்சு அளவு டைனோசரும் இருந்தது. 100 அடி நீள டைனோசரும் இருந்தது. தாவரங்களை உண்ணும் டைனோசர்களும் இருந்தன . விலங்குகளை வேட்டையாடி உண்ணும் டைனோசர்களும் இருந்தன . எப்போதோ இறந்து போன டைனோசர்களின் புதை படிவங்களை வைத்துதான் விஞ்ஞானிகள் நிறையத் தகவல்களைச் சேகரித்து வைத்துள்ளனர். டைனோசர்களின் தலை, கால் போன்ற உறுப்புகளின் புதை படிவங்கள் நிறையவே கிடைத்துள்ளன . அபூர்வமாக டைனோசரின் முழு எலும்புக்கூடு கிடைத்துள்ளது. தமிழகத்திலும் டைனோச்ர்கள் இருந்துள்ளன . ஒரு வகை டைனோசருக்குத் திராவிடோசாரஸ் என்று ...

FEEDBACK

Name

Email *

Message *