Skip to main content

Posts

Showing posts from 2011

GIRLS PLEASE READ THIS

GIRLS PLEASE READ THIS HERE'S 99 FACTS ABOUT GUYS 1. Guys don’t actually look after good-looking girls. They prefer neat and presentable girls. 2. Guys hate flirts. 3. A guy can like you for a minute, and then forget you afterwards. 4. When a guy says he doesn’t understand you, it simply means you’re not thinking the way he is. 5. “Are you doing something?” or “Have you eaten already?” are the first usual questions a guy asks on the phone just to get out from stammering. 6. Guys may be flirting around all day but before they go to sleep, they always think about the girl they truly care about. 7. When a guy really likes you, he’ll disregard all your bad characteristics. 8. Guys go crazy over a girl’s smile. 9. Guys will do anything just to get the girl’s attention. 10. Guys hate it when you talk about your ex-boyfriend. 11. When guys want to meet your parents. Let them. 12. Guys want to tell you many things but they can’t. And they sure have one habit to ga...

காற்று

யார் அங்கே  கைது செய்யுங்கள் காற்றை; என்னவளை தொட்டு விளையாடிய  குற்றத்திற்காக;

வருத்தமில்லை நீ மறுத்தபோதும்

என்னவளே  வருத்தமில்லை நீ மறுத்த போதும்  திருத்தம் இல்லை நீ தவிர்த்த போதும்  உந்தன் காதல் மனதில் வந்த பிறகு  உனைத் தவிர இடமில்லை காற்றுக்கும்  குறைவாகவே சுவாசிக்கிறேன்  மனதில் நம் காதல் வாழ  சுவாசித்தால் தான் உயிர்வாழ்வேன்  என்பதை மறந்து காதலை நினைத்து 

இயற்கையாய் ஏனடி மாற்றுகிறாய்

அதற்குள் ஏன் வந்தாய்  அந்தி சாயவில்லையே அன்பே...!  அங்கே பாரடி  அல்லிப் பூக்கள் அவசரப் பட்டு பூத்திருக்கு..!  இன்பமாய் இருக்கிறாய்...  இயற்கையாய் ஏனடி மாற்றுகிறாய் ..!

உன் சம்மதம் வாங்க என் மதம் மறந்தேன்

என்னவளே  உன் சம்மதம் வாங்க  என் மதம் மறந்தேன்  எம்மதம் அறியேன்  உன் சம்மதம் தவிர  விழிகளால் சொல்  விளக்கமாக சொல்  விளங்கும்படி சொல்  விரிவாக சொல்  விரைவாக சொல்  மதத்திற்கு நம்மை பிடிக்கும் முன்  உன் மனதிற்கு என்னை பிடிக்கும் என்று சொல்  நம் காதல் வாழட்டும் மதமின்றி

உன் காதல் கொடு

களவு போன இதயத்தை  கடத்தி சென்று சிரித்து நின்று  கண்களால் கவிதை சொல்கிறாய்  காதல் என்று சொன்னால் மட்டும்  இல்லை என்று உடனே மறுக்கிறாய்  உன் காதல் கொடு இல்லை  என் இதயம் கொடு  நான் வாழ

தமிழ் மொழியிலும் வரும் பகுதி இரண்டு

உன்னை வர்ணிக்க வர்ணிக்காத வார்த்தை தேடி  என் மனதின் பயணம்  உவமைக்காக இல்லை ஒரு பொருள்  உனக்கு என நான் கவிதை சொல்ல  எல்லாம் வர்ணிக்க பட்டு விட்டது  சில ஜெயித்த  காதலுக்கும்  சில தோற்ற காதலுக்கும்  காத்திரு கண்ணே  தமிழ் மொழியிலும் வரும் பகுதி இரண்டு  அதி லி ருந்து தேர்ந்தெடுக்கலாம்  உன்னை வர்ணித்து சொல்ல  கவிதைக்கான வார்த்தைகளை

உன்னை பிரிவதென்றால்

என்னை பிரிகிறேன் என்கிறாய்  நான் பேசாது போனால் உயிர் போகும்  என்கிறாய்  தாங்க முடியாத துயரம் என்கிறாய்  தினம் கண்ணீர் கொண்டு நனைகிறாய்  உன்னை பிரிவதென்றால்  எப்படி பிரிவேன் உயிராய் ஆன  உனது காதலை

தேனின் வாசம்

நீ பேசும் போது  என் செல் போனில்  பட்டம் பூச்சிகள்  வட்டம் இடுகிறது...  தேனின் வாசம் நீ  பேசும் பேச்சில்...!

எனக்கு உன் மௌனமும் பிடிப்பதில்லை

என்னவளே  எனக்கு மழையை பிடிப்பதில்லை  வானம் எழுவது போல் தோன்றுவதால்  பூக்களின் சிரிப்பு பிடிப்பதில்லை  என் காதலை எள்ளினகையாடுவதுபோல்  தோன்றுவதால்  எனக்கு உன் மௌனமும் பிடிப்பதில்லை  ஒன்றும் புரியாததால்

உன் காதலை போல்

எத்தனை விளக்கங்கள் என் உள்மனம்  சொல்லியும் விளங்கவில்லை உன் காதல்  ஆறுதல் சொல்லும் மனதிற்கும்  அலுப்பு தட்டி போகும் என்ற  பயம் வருகிறது பயத்தின் காரணம்  அலுப்பு தட்டி போகும் என்றல்ல  உன் காதலை பிரிந்து விடுமோ மனம்  என்னும் அச்சம் உலுக்கி எடுக்கிறது  உன் காதலை போல்

நீ அருகில் இல்லாத தருணம்

என்னவளே  எல்லாம் பேசி முடித்த பின்னும்  எதோ ஒன்று குறைவதாய்  தோன்றும் எனக்கு புரியவில்லை  காதல் என்று அப்போது  இன்று பேச துடிக்கும் மனம்  நீ அருகில் இல்லாத தருணம்

மேளங்கள் முழங்க..!!

முகமும் தெரியாது  முகவரியும் தெரியாது  முழு இரவும் நான் கொள்ளும்  மணமகளின் நினைவு  மட்டும் நெஞ்சுக்குள்ளே..!  நள்ளிரவில் நடுத்தெருவில்  நின்று கொண்டு  சாரல் சிதறலில்  என் வாழ்வை வண்ணமாக்க  வானவில்லாய் அவளைத்  தேடிய போது,  ஏழு வண்ணம் மட்டும் உனக்கெதற்கு,  எல்லாமும் தருகிறேன் எனச் சொல்லி  இருளை விரட்டி வெண்ணிலவாய்  என் அருகில் வந்து  விரலிடையில் விரல் சேர்த்துக்  கருவிழியில் காதல் செய்து,  அவள் கையிரண்டால்  என் கழுத்தைக் கட்டியணைத்து  மாலையாக என் மார்பில்  விழும் நேரம்,  ஓருயிராய் ஒன்றாய் என்றும்  அவளுடன் வாழத் துடிப்பேன்,  வாழும் வரையில்..,  அந்த அன்பான உறவை  அழகான பெண்ணைத்  தேடித் திரிகிறேன்,  என் சோகங்கள் குறைந்து  மேளங்கள் முழங்க..!!

குழந்தைகள் பிறந்தவுடன் அழுவது ஏன் !

இ ந்த தகவலை வாசிக்கும் ஒவ்வொருவரின் பார்வையிலும், இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுது கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. சரி அப்படி எதற்குத் தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன? இதோ தெரிந்து கொள்ளுங்கள்.  ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும் பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள்  கேட்டு கேட்டு மெய் மறந்து, அந்த இதயத் துடிப்பின் இசையில்  பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம்.  இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால் தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம். அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக் கொள்ளும் பொழுது குழந்தை  மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நீ வர வேண்டும்

வசந்தம்  தென்றலுக்காக  காத்திருகிறது  நான் உனக்காக  காத்திருக்கிறேன்  வசந்தமாக இல்லை  உன்னவனாக  நீதான் என் வசந்தம்  நீதான் என் தென்றல்  நீ வரவேண்டும் 

கோபப்படும் பொழுது சத்தமாக பேசுவது ஏன்

இருவரும் ஒருவருக்கு ஒருவர் கோபப்படும் பொழுதோ, சண்டை இட்டுக் கொள்ளும் பொழுதோ, அவர்களின் இதயங்களுக்கு இடையே தூரம் அதிகமாகி விடுகிறது. இந்த தொலைவின் காரணமாக, ஒருவர் சொல்வது மற்றொருவரை சென்றடைய அதிக சத்தமாக பேச வேண்டியிருக்கிறது. எந்த அளவிற்கு கோபம் அதிகம் இருக்கிறதோ அந்த அளவிற்கு சத்தமாக பேச வேண்டியிருக்கிறது. அதேபோல் ஒருவருக்கு ஒருவர் மிகுந்த அன்புடன் இருக்கும் பொழுதோ அவர்கள் பேசுவது மற்றவர்களுக்கு கேட்பதில்லை. அவ்வளவு மென்மையாக சப்தம் இல்லாமல் பேசிக் கொள்ள காரணம் இதயங்களுக்கு இடையே மிகக் குறைந்த தூரம். இன்னும் சொல்லப்போனால் காதலர்களின் இதயங்கள் இணைந்தமையால் அங்கே வார்த்தை தேவையில்லை அல்லது வருவதில்லை.

மெய் பிம்பங்கள்

உண்மையை காட்டும் கண்ணாடியே  நீயும் சத்திய சோதனை படித்தாயோ ?  என்னை நீ காட்டுகிறாய்  தன்மைச் சற்றும் மாறாமல்  ஒப்பனை செய்துப் பார்க்கையிலே  ஒய்யாரமாய் என்னைக் காட்டுகிறாய்  கோபப்பட்டு நான் வந்தால்  சீற்றமாகக் காட்டுகிறாய்  புன்முறுவலுடன் நான் நின்றால்  தன்மையாகச் சிரிக்கின்றாய்  என் சுட்டு விரலை நீட்டினால்  எனையே குறித்துக் காட்டுகிறாய்  கனிந்து உருகி நான் நின்றால்  கசிந்து உருகி எனை நோக்குகிறாய்  சோகப் பட்டு கண்ணீர் சிந்தையிலே  நீயும் என்னுடன் அழுகின்றாய்  என் உண்மை நிலையை காட்டுகிறாய்  என் உணர்வுகளை பிரதிபலிக்கிறாய்  உடைந்துச் சிதறி கிடந்தாலும்  ஒவ்வொரு துண்டிலும் எனை காட்டுகிறாய்  உடையும் பொருளே ஆனாலும்  உயர்ந்த கருத்தை உணர்த்துகிறாய்  நம் சிந்தையும் செயலும் எப்படியோ  நம் வாழ்வும் அமையும் அப்படியே !

எய்ட்ஸ்

பண்பாடுப் பயிற்றுவிக்கும்  பயமுறுத்தல் நோய்  எய்ட்ஸ்  ஒழுக்கத்தைப் பொதுவாக்குவோம்  இரு பாலருக்கும்  வராது எய்ட்ஸ்  மருந்து இல்லை  மரணம் உறுதி  எய்ட்ஸ்  உயிரை உருக்கும்  உடலைக் கெடுக்கும்  எய்ட்ஸ்  கவனம் தேவை  குருதி பெறுகையில்  எய்ட்ஸ்  எச்சரிக்கை  ஊசி போடுகையில்  எய்ட்ஸ்  வருமுன் காப்போம்  உயிர்க் கொல்லிநோய்  உணர்ந்திடுவோம்  சபலத்தின் சம்பளம்  சலனத்தின் தண்டனை  எய்ட்ஸ்  சில நிமிட மகிழ்வால்  பல வருடங்கள் இழப்பு  எய்ட்ஸ்  வெறுக்க வேண்டாம்  நேசிப்போம் நண்பராக  எய்ட்ஸ் நோயாளிகளை 

நிறத்தை வைத்து குணத்தைக் கண்டுபிடிக்கலாம்

நி றத்தைவைத்து குணத்தைக் கண்டுபிடிக்கலாம்' - இது  தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட். 'உங்களுக்குப் பிடித்த கலரைச்  சொல்லுங்கள். உங்களைப் பற்றிச் சொல்லுகிறோம்' என்று சிலர்  கிளம்பியிருக்கிறார்கள். இதோ அவர்களின் கலர்ஃபுல் ஜோதிடம். வெள்ளை :   நீங்கள் இளமை விரும்பிகள் எதிலும்  பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக்  கால் விடும் கல்லுளிமங்கன்ஸ். அதனால், சீக்கிரம் ஏமாறமாட்டீர்கள்.  பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடை களை அணியாதீர்கள். ஏனெனில், மழை பெய்து ஊரே சகதியாகக் கிடக்கிறது!  சிவப்பு ரொம்பவே ஆக்டிவ் பார்ட்டி. நத்தை கூட மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். இந்த கலர் பிடித்த ஆண்களுக்கு ஒரே மாதிரியான வாழ்க்கை என்றாலே கசப்பு. (மனைவிகள் கவனிக்க!) அதிக மன வலிமை இருக்கும். அதுதான் பலமும் பலவீனமும்!  பிங்க்   :        சிவப்பின் மென்மைக் குணமே பிங்க். சரியான  சுய நலச் சுனாமிகள். எப்போதும் தன்னை யாராவது கவனித்துக் கொள்ள வேண்டும்  என்று எதிர் பார்ப்பார்கள். ...

காதலை உறுதியாக மறுத்து விடுங்கள்

காத‌லி‌ப்ப‌தி‌ல் எ‌வ்வளவு உறு‌தி வே‌ண்டுமோ அதை விட காதலை மறு‌ப்ப‌திலு‌ம் உறு‌தியாக இரு‌க்க வே‌ண்டு‌ம். அது தா‌ன் இருவரது வா‌ழ்‌க்கையையுமே ந‌ல்ல முறை‌யி‌ல் கா‌ப்பா‌ற்ற உதவு‌ம். ஒரு இளைஞன் ஒரு பெண்ணிடம் வந்து தனது காதலை சொல்லும் போது அதற்கு மூன்று பதில்கள் இருக்கலாம். எந்த பதிலாக இருந்தாலும், உடனடியாக அந்த இளைஞனிடம் அதனை உறுதியாக சொல்லி விடுவது நல்லது. அது என்ன மூன்று பதில்கள்.  ஒன்றாவது: ஆம், நானும் உங்களை காதலிக்கிறேன்,  இர‌ண்டாவது: எனக்கு யோ‌சி‌க்க கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்,  மூன்றாவது: இல்லை. எனக்கு உங்கள் மீது காதல் இல்லை என்பது தான். முதல் மற்றும் இரண்டாம் பதில்களுக்கு பெரும்பாலும் ஆம் என்ற ஒரே அர்த்தம் தான் வரும். அதாவது காதலிக்கிறேன், நன்கு யோசித்து சொல்கிறேன் என்றால், யோசிக்கும் இடத்தில் அவர் இருக்கிறார் என்று தானே அர்த்தம். அப்படி யோசித்து இல்லை என்றாலும் அதை உடனடியாக கூறி விட வேண்டும். ஆனால் இல்லை என்ற பதிலை உடனடியாக கூறி விடுவது ஒருவரின் வாழ்க்கையையேக் காப்பாற்றும். ஒரு இளைஞனை காதலிக்க முடியாது என்ற பட்சத்தில், அவரிடம் உங்களை காதலிக்க முடியாது என்று மறுத்து வ...

என்ன சொல்ல காதலியே?

நீ இன்றி  என்னால் வாழ முடியாது என்று சொல்லி  இறந்து  போக ஆசை தான்  என்ன செய்வது  கல்லறை கேட்குமே என்னிடம் ! என் இதயம் எங்கே என்று  என்ன சொல்ல காதலியே?  என் கல்லறைக்கு ?..... 

தந்து விட்டேன் உன்னிடம்

என் இதயத்தை  தந்துவிட்டேன் உன்னிடம்  நான் இறந்தும்  என் உயிர் வாழ்கிறது  இந்த மண்ணிடம்

கண்ணீர் தந்து போகிறாய்

அன்று கருணையோடு  காதல் தந்தாய்  இன்று  கனவு ஒன்று  கலைந்தது என்று  கண்ணீர் தந்து போகிறாய்

அன்பின் அர்த்தம்

நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டுகள் வாழ்வதைவிட.... உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார்... அன்பின் அர்த்தம் புரியும் !.

இதயத்தில் வலி

டீக்கடை பெஞ்சில்_ கையில் மாலை நேர செய்தித்தாள் சுற்றி நண்பர்களின் அரட்டையாய்... பனிக்காற்று மெல்ல எனை வருடி... எள்ளி நகையாட.... தலை நிமிர்ந்தேன் என் முன்னாள் காதலி... தன் கணவனோடு கைகோர்த்து... நடை பயின்றாள்... என் மனதில்... இதயத்தில் வலி எடுக்க....

என் காதலிக்காக

எல்லாவற்றிலும் எனக்குப் பிடித்ததையே நீ தேர்ந்தெடுத்தாய்; உனக்குப் பிடித்ததையே நான் தேர்ந்தெடுத்தேன்; அதனால் தான்.....! காதல் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது இது என்  காதலிக்காக;

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க

சூழ்நிலைக்கேற்ப அனுசரிக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதற்காக உங்கள் நோக்கத்தைக் கைவிட வேண்டியதில்லை. வெளிப்படையாகப் பேசுங்கள். ஆனால் முரட்டுத்தனம் வேண்டாம். துணிவுடன் இருங்கள். ஆனால், எதிர்ப்புணர்வைக் காட்டாதீர்கள். தொடர்ந்து கடுமையாக உழையுங்கள். விட்டு விட்டு உழைப்பதில் பலனில்லை. ஏதாவது ஒன்றில் விசேஷமான திறமை பெறுங்கள். அதற்காக உங்களை குறுக்கிக் கொண்டு தெளிவை  இழக்க வேண்டியதில்லை. எழுத்திலும் பேச்சிலும் திறமையினை வளர்த்துக் கொள்ளுங்கள். வெறும் வார்த்தை ஜாலங்களில் ஈடுபடாதீர்கள். அடிப்படைகளையும் விவரங்களையும் தனித் தனியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். செயலுக்குத் திட்டமிடுங்கள். அதே சமயம் விவரங்களை அலட்சியப் படுத்தாதீர்கள். மனித இனத்தில் நம்பிக்கை வையுங்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள். ஏமாளியாகவோ, தலை கர்வத்துடனோ இருக்காதீர்கள். மனதில் சித்திரம் உருவாக்கி முன் கூட்டியே திட்டமிடுங்கள். உடனடியான எதிர்காலத்தை மறந்து நீண்ட எதிர் காலத்திற்குத் திட்டமிடாதீர்கள். மரியாதைக் குறைவினையோ, வெறுப்பையோ வளர்த்துக் கொள்ளாதீர்கள். வேலையை நேசியுங்கள். அதுவே முழு திருப்தியை அளிக்கும். முயற்சியை வளர்த்துக் கொள்...

பெண்களே நீங்களும் பின்பற்றலாமே

ஒவ்வொரு, பெண்களின் வாழ்க்கையிலும் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்துவது திருமணம்! அன்றைய நாளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி அற்புதமான ஆலோசனைகள். திருமண நேரத்தில் எல்லோரின் பார்வையும் மணப் பெண்ணையே மையமாகக் கொண்டிருப்பதால் பெண்மைக்கே உரிய நாணம் அவளைத் தலை குனிய வைத்து விடும். இது போன்ற சூழலில் மணப்பெண் தனது தன்னம்பிக்கையை ஒரு போதும் தளர விட்டு விடக் கூடாது. சில பெண்கள் பயத்தில் மண மேடையிலேயே கண்ணீர் உதிர்த்த படி இருக்கிறார்கள்.  மகிழ்ச்சியான நாளில் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் தேவை. அப்போது தான் அன்று  எடுக்கப்படும் போட்டோ, வீடியோ காமிராவில் மிக அழகாக காட்சி அளிப்பீர்கள். அதுபோல திருமணத்தின் போது மணப் பெண்கள் புடவை கட்டுவதில் கவனமாக இருக்க வேண்டும்.  பட்டுப் புடவையானது அதிகம் தூக்கலாகவோ, தொங்கலாகவோ இருக்கக்கூடாது. மணமேடையை நோக்கி நடக்கும் போது மிகவும் மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும். குறிப்பாக படிக்கட்டில் ஏறும் போது கவனமாக இருப்பது நல்லது. வழக்கம் போல் அங்கும் இங்கும் பார்வையைச் சிதற விடாமல் கீழே கவனமாக பார்த்து அடியெடுத்து  வைக்க வேண்டும் . உங்கள...

பொய்

காதலித்து  கைவிட்டதற்குப்  பதிலாக  காதலிக்கவில்லையென  நீ  பொய்யே சொல்லியிருக்கலாம்

அன்பே..!

பெண்ணே ! ஓன்று நீ பேசு; இல்லை உன் கண்கள் பேசட்டும்; ஒரே நேரத்தில் இரண்டுமே பேசினால்  நான் எப்படி கேட்பது; மூன்றாம் கண்ணால் பரமசிவம் செய்ததை  நீ உன் கடைக் கண்களால் செய்து விடுகிறாயே; என்ன முழிக்கிறாய்; நீ என்னை சுட்டெரிப்பதைத் தான் சொல்கிறேன்;

காதல் விழுங்கல்

காதலைப் பற்றி என்ன  வேண்டுமானாலும் கூறிடலாம்; ஆயிரம் அர்த்தங்கள்  பொதிந்து கிடப்பது என்னவோ தோல்வியடைந்த காதலில் மட்டும் தான்; விடுபட்ட அர்த்தம் கோடிக்கணக்கில்; பேசாத மொழிகள் இல்லை; தீண்டாத  விழிகள் இல்லை; இருந்தும் சில இதயங்கள் காதலை விழுங்கி விடுகின்றன;

FEEDBACK

Name

Email *

Message *