Skip to main content

Posts

Showing posts from June, 2011

என் இதயம்

நன்றாக யோசித்துப் பார்த்து விட்டேன் உன்னை மறக்க நினைத்து மறக்க முடியவில்லை முயன்றாலும் உன்னையே நினைக்கிறது  என் மனம்; தூங்கிப் பார்த்து விட்டேன் உன்னை வெறுக்க நினைத்து உன்னை பார்க்கத் துடிக்கிறது என் கனவுகள்; அழித்துப் பார்த்து விட்டேன் உன்னை நினைக்க  மறந்து உனக்காகவே துடிக்கிறது என் இதயம்;

என் காதலிக்கு

பேசாத என் வார்த்தைகளை விட; பார்க்காத என் கண்களை விட; உன்னை நினைத்துக் கொண்டிருக்கும்  என்  இதயத்திற்கு  தான் வலி அதிகம்; அதனால் தான் சொல்கிறேன்; நான் இறந்த பிறகு என் இதயத்தை  எடுத்து கொடுங்கள்; இதயமே இல்லாத என் காதலிக்கு;

பதில் சொல்

பெண்ணே ! காதலிக்கும் போது  மனதைத் தான் பறித்தாய்; ஆனால், என்னை விட்டு பிரியும் போது ஏன் என் உயிரையும் சேர்த்துப் பறித்தாய்? பதில் சொல் !

காதல் பரிசு

மழைத்துளி தான்  எல்லோர்க்கும்  உயிர்த்துளி; ஆனால் எனக்கோ கண்ணீர்த்துளி; கண்ணீர்- எனக்கு  நீ  தந்துச்  சென்ற  காதல் பரிசு;

எங்கே நீ

பெண்ணே ! என் வாழ்கையில், நீ நுழையும் போது எனக்கு எல்லாமுமாய்  வந்தாய்; என்னிடம் அப்போது மகிழ்ச்சி உண்டு; கண்ணீர் இல்லை; ஆனால் இப்போது நீயில்லை; மகிழ்ச்சி இல்லை; கண்ணீர் மட்டும் தான்; எங்கே நீ......!

புகைப்படம்

உனக்கே தெரியாமல் உன் புகைப்படத்தை எடுத்தது உண்மை தான்; என்னை திட்டுகிறாய்; ஒன்றே ஓன்று சொல்கிறேன்; என் மனதில் உயிர்ப்படமாய் இருக்கும்  உன்னைப் பார்க்க எனக்கு  எதற்கு உன் புகைப்படம்;

கல்லறை ஏற

பெண்ணே உன்னைக் காதல் செய்தேன்; மணவறை ஏற; என்னை விட்டு சென்றாய்,  நான் கல்லறை ஏற;

காயம்

மலரே ! ஏன் மௌனமாய் இருக்கிறாய்; உன்னை தாங்கும் காம்பு நான்; ஏன் என் முள் முட்டி உன்னைக்  காயப்படுத்தியதா ?

இறுதிச்சடங்கு

என் காதலியின் நினைவுகளை வாங்கி  எனக்கு பாடை கட்டுங்கள்; என் காதலியின் கண்ணீரை வாங்கி என் மேல் பன்னீராய் தெளியுங்கள்; என் காதலியின் புன்னகையை வாங்கி  என் மேல் பூக்களாய் தூவுங்கள்; என் காதலியின் காலடி மண் வாங்கி  எனக்கு கல்லறை எழுப்புங்கள்; என் காதலியின் இதயத்துடிப்பை வாங்கி  எனக்கு இறுதிச்சடங்கு செய்யுங்கள்;

ஆயுள் கைதி

மான்குட்டியாய் துள்ளித் துள்ளி திரிந்து கொண்டிருந்தேன்; என் வாழ்க்கை எனும் ஓடத்தில்  வந்து ஏறினாய்; பாதியில் இறங்கியும் விட்டாய்; இப்போது எப்படி வாழப் போவது  என்று தெரியாமல் தத்தளிக்கிறேன்; இப்போது இருக்கிறேன்; ஆயுள் கைதியாய் உன் இதயத்தில்;

காதல் தோல்வி

மனதில் பதிந்த உன்னை  எப்படி அழிப்பேன்; உயிரைக் கூட தூக்கி எறிவேன்; உன்னை எப்படி தூக்கி  எறிவேன்; என் அன்பைக் கேட்டாய்; என் பாசம் கேட்டாய்; கடைசியில் என் உயிரையும்  கேட்கிறாயே காதல் தோல்வி எனும் பெயரில்;

உனக்காக

உன்னை நான் முதன்முதலில்  பார்த்த போது என்னை நான் மறந்தேன்  ஒரு நொடியில்; உன்னுடன் பேசும் போது  என் இதயத்தை  இழந்தேன்; உன் மேல் காதல் கொண்டு  என் வாழ்க்கை நீ தான் என்றதால் உறவுகளின் நன்மதிப்பை  இழந்தேன்; என் அம்மாவிடம்  நீ தான் என் காதலி  என்று சொன்னதால்  அம்மாவின் அன்பை  இழந்தேன்; உன் மீது அன்பு, பாசம், காதல் வைத்ததால், உடன்பிறப்புகளின் உறவினை  இழந்தேன்; உன்னையே நினைத்துக்  கொண்டு  இருந்ததால், என் உணர்வுகளை  இழந்தேன்; ஊண், உறக்கம்  இழந்தேன்; உன்னையே மனதில்  சுமந்து திரிந்ததால்  குடும்ப சுமையை  இழந்தேன்; நீ என் இதயத்தை  தினம் தினம் நோகடிப்பதால்  என் பசியினை  இழந்தேன்; நீ என் வகுப்பறையில்  இல்லாததால்  என் படிப்பை  இழந்தேன்; உ ன க்காக காத்திருந்து காத்திருந்து  என் வாழ்நாளை  இழந்தேன்; உன்னை தினம் பார்க்க வேண்டும்  ஆனால், பார்வை இருந்தும், பார்வை இழந்துள்ளேன்; ஆனால், நீயோ உயிரை இழக்கச் சொல்கிறாய்; ...

காதலிக்கவில்லை

  என் உயிரே  பிரிந்தது  போல் உணர்ந்தேன்; நீ  என்னை  காதல்லிக்கவில்லை  என்றவுடன்;

காதலில்

முயன்றுப் பார்த்தேன்; முடியவில்லை; தோற்று விட்டேன்; தேர்வில் அல்ல; காதலில்;

உன் காதலுக்காக

இன்னொரு பிறவி  பிறக்க போவதில்லை; இப்பிறவியில் கிடைத்த  உன்னை நான் பிரியப் போவதில்லை; ஆனால்  உனக்கு  என் காதல்  புரியவில்லை; புரியுமா? நான் காத்திருப்பேன்; என் கடைசி மூச்சு வரை  உனக்காக; உன் காதலுக்காக;

ஏன் விலகி சென்றாய்

நீ தினமும் கல்லூரிக்கு  வரும் வரை  கால் வலிக்க  காத்திருந்தேன்; அப்போது எனக்கு  தெரியாத வலி ! நான் அருகில்  வந்ததும்  என்னை  கண்டு கொள்ளாமல்  சென்றாய்; உன்னை எதிர்பார்த்து  உனக்காக  காத்திருந்த  எனக்கு, என் விழிகளுக்கு  தெரியாத மரண வலி; கல்லூரி  விடுமுறையில்   உன் காதலன் என்று  ஒருவன்  என்னை கைபேசியில்  அழைத்து  மிரட்டுகிறான்; அப்போது தான் தெரிந்தது நீ ஏன் என்னை விட்டு  விலகி சென்றாய் என்று; காதல் துரோகி நீ;

உன்னையும், நம் காதலையும்

மனதில் விதையாய் உன்னை விதைத்தேன்; மரமாய் வளர்ந்தாய்; வளர்ந்த உன்னை வெட்ட  மனம் வரவில்லை; மரத்தை அல்ல, உன்னையும்,  நம் காதலையும்;

உன் விழியை பார்த்ததிலிருந்து

மோதி விளையாட  இடம் கிடைக்காமல்  இருந்த என் கண்கள்; இப்போது விளையாட  தொடங்கி விட்டது; என்றோ ஓர் நாள்  என்னையும் அறியாமல்  உன் விழியை  பார்த்ததிலிருந்து;

உன் நினைவு

பட்டாம்பூச்சி போல்  சிறகடித்து பறந்து  கொண்டிருந்தேன்; உன்னை பார்க்கும்  முன்பு வரை; இப்போது, பெட்டிப் பாம்பு  போல அடங்கி விட்டேன்; உன் நினைவுகளை  சுமந்து கொண்டு வாழ்வதால்;

கண்ணீர்

நான் சாலையில்  நடந்து வந்தேன்; நீ என்னை  கடந்து போனாய்; உன் நினைவில் நான் தோற்று போனேன்; முதலில்  காதலில்; கடைசியில்  கண்ணீரில்; காதலின் கடைசி  கண்ணீர் தானா !

என் மனைவியுடன்

எங்கோ  பிறந்தோம்; எங்கோ வளர்ந்தோம்; ஒன்றாய் படித்தோம்; என் மனதை க்  கொள்ளை கொண்டு, என் மனம் வைத்து, உன் மனதை கொள்ளை அடிக்க ச் செய்தாய்; இரவு பகல் பாராமல்  உன்னை நினைத்து படிக்காமல் இருந்தேன்; நீ படித்தாய்; என் படிப்பை த் தொலைத்தேன்; உன்னை நினைத்து காதல் கனவு கொண்டதால், என் வாழ்க்கை கனவை தொலைத்தேன்; இத்தனை கனவுகளை சுமந்து கொண்டு இருக்கிறேன்; வருவேன் ஒரு நாள், உன்  திருமணத்திற்கு என் மனைவியுடன்.

காதல் தோல்வி

என் காதலை  மௌனத்தால்  பலமுறை உணர்த்த நினைத்தும்  முடியாமல் தவிக்கிறேன். முடியவில்லை. தோற்று விடுவேனோ என்ற பயம்; காதலிலும்; வாழ்க்கையிலும்;

வேறொன்றும் செய்ய தெரியவில்லை எனக்கு

ஏதாவது செய்யலாமென்று நினைத்து ஏதேதோ  செய்து  பார்க்கிறேன்; இப்பொழுது தான் தெரிகிறது; உன்னை காதலிப்பதை த்  தவிர , வேறொன்றும் செய்ய  தெரியவில்லை எனக்கு;

மனதில் காதல்

பெண்ணே ! உன் கண்களில் என்ன அமிலம் சுரக்கிறதா ? உன்னை ப்  பார்த்தவுடன் என் தலை கவிழ்கிறதே; உன்  கண்களில்  என்ன மது  சுரக்கிறதா  ? உன்னை நினைத்தாலே தள்ளாடுகிறதே என் மனம்; மனதில் காதல் !

காதலியின் மௌனம்

என்னைத்  தாக்கிய மிகப்  பெரிய ஆயுதம்; என்  காதலியின் மௌனம்  தான்;

பாசம் கிடைக்குமா;

சிறு வயதில் எழுதுகோல்  தொலைத்தேன். தேடினேன், தேடினேன், தேடி கொண்டே இருந்தேன்; இளைஞனான உடன் கைப்பேசியைத்  தொலைத்தேன். தேடினேன், தேடினேன், தேடி கொண்டே இருக்கிறேன்; அவள் மேல் காதல் கொண்டதால் அம்மா அப்பாவை தொலைத்தேன். தேடினேன், தேடினேன். எழுதுகோல்  தொலைந்தால் தேடி எடுக்கலாம் அல்லது  புதிதாய்  வாங்கலாம்; கைப்பேசி தொலைந்தால் தேடி எடுக்கலாம்  அல்லது புதிதாய்  வாங்கலாம்; அனால் அந்த பாழாய் போன காதலால், என் இழந்து போன தாய் தந்தை  பாசத்தை எப்படி பெறுவேன், இப்போது அவள் இல்லை. பாசத்தை தேடுகிறேன், கிடைக்குமா?

FEEDBACK

Name

Email *

Message *