என் காதலியின் நினைவுகளை வாங்கி
எனக்கு பாடை கட்டுங்கள்;
என் காதலியின் கண்ணீரை வாங்கி
என் மேல் பன்னீராய் தெளியுங்கள்;
என் காதலியின் புன்னகையை வாங்கி
என் மேல் பூக்களாய் தூவுங்கள்;
என் காதலியின் காலடி மண் வாங்கி
எனக்கு கல்லறை எழுப்புங்கள்;
என் காதலியின் இதயத்துடிப்பை வாங்கி
எனக்கு இறுதிச்சடங்கு செய்யுங்கள்;

Comments