நீ என் இதயம் என்று சொல்ல மாட்டேன்; ஏன் என்றால் இதயம் கூட ஒரு நாள் நின்று விடும் என்பதால்; நீ என் மூச்சுக் காற்று என்றும் சொல்ல மாட்டேன்; ஏன் என்றால் மூச்சுக் கூட ஒரு நாள் நின்று விடும் என்பதால்; நீ என் உயிர் என்றும் சொல்ல மாட்டேன்; ஏன் என்றால் உயிரும் ஒரு நாள் பிரிந்து விடும் என்பதால்; நீ என் கண் என்றும் சொல்ல மாட்டேன்; ஏன் என்றால் கண் கூட ஒரு நாள் மங்கி விடும் என்பதால்; நீ என் முடி என்று கூட சொல்ல மாட்டேன்; ஏன் என்றால் முடி கூட ஒரு நாள் உதிர்ந்து விடும் என்பதால்; நீ என் இரத்தம் என்று கூட சொல்ல மாட்டேன்; ஏன் என்றால் இரத்தமும் ஒரு நாள் சிந்திவிடும் என்பதால்; ஆனால் , உன்னை என் நிழல் என்பேன்; ஏன் என்றால், நிழல் மட்டும் தான் இறுதி வரை என் கூடவே இருக்கும். உன்னால் என் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் கிடைத்து விட்டது.