Skip to main content

Posts

Showing posts from 2015

காதல் பிரிவு

நீ பிரிந்து சென்றதற்காக ஒருபோதும் அழுதவன் இல்லையடி நான்; ஆனால், நம் காதலை புரிந்து கொள்ளாமல்  பிரிந்து சென்றாயே என்று தான்  கலங்கித் தவிக்கிறேன்;

நீ , நான், நாம்

வெண்பிறையே ...!!!  நிலாமுகமே....!!!  சாய்ந்து அசைந்தாடும் முல்லை ச்  சுடரே....!!!  முத்தமிழும் சங்கமிடும் தமி ழ்க்  கூற்றே....!!!  நினைக்கிறேன்  உனையே தினமும்....!!! கிடைக்குமா இதயத்தில் புகலிடம்....!!!  "நீ" ,"நான்"  எனும்  ஒருமையில் இருப்பதை,  "நாம்" எனும் பன்மையாய் அமைக்க  தருவாயா இதயத்தில் அகலிடம்....!!!  நீ வேண்டாம் என்றதும் மடியவே  தமிழன்னையை சாட்சி வைத்து  அவள்  பாத மடியில்  காத்திருக்கிறேன்  முடிவில்லா  ஆசையில்...... !!!!!

என்ன ஒரு முரண்பாடு

வேறொருவன் கட்டிய தாலி  உன் மார்பில் உரிமையாக புரள  நீ கோவிலில் நிற்கிறாய் ....!!  "வா போகலாம்" என்கிறாள் என் அம்மா; "ம் போகலாம்" என்கிறான் உன் கணவன்;  உன்னை மறக்காமல் நானும்; என்னை மறந்த நீயும்; நம்மை மறந்த நம் காதலும்; என்ன ஒரு முரண்பாடு.

கண்ணீர் காதல்

என் காதலை வார்த்தைகளாக வடித்து  உன்னுள்  எதுகையாக விதைக்கத் தெரியாமல்  கண்ணீரை மோனையாக உன்  காலடியில் சமர்பிக்கிறேன்;

காதலின் காத்திருப்பு

நேற்று மழையுடன் வந்தாய்; இன்று குடையுடன் வருகிறாய்; அக்குடையில் ஓர்நாள்  அடைக்கலம்  தருவாய் என  எனக்கு நானே பொய் சொல்லி  காத்திருக்கிறேன்  எனக்காக காதலுடன்  வருவாய் என்பதற்காக ....!!!

இது கூட காதல் தானோ

அன்பே...!!!  அன்று வகுப்பில் ரேடியோ அலைகள்  பாடம் எடுத்த போது கூட எங்கே நான்  அதை கவனித்தேன்; உன்னை நினைத்து காதல் வலையை அல்லவா  பின்னலிட்டுக் கொண்டிருந்தேன்......!!!  உனக்காகவே பேருந்து நிறுத்தத்தில்  காத்து நிற்பேனே கண்ணே...  கால் வலியாலா அவதிப் ப ட் டிருப்பேன் ! காதல் வழியால் அல்லவா அவதியுற்றிரு ப் பேன்.....!!!  உன்னையும் சேர்த்து உன் சுண்டுவிரலையும்  ரசித்தவனடி நான்....!!!  வர்ணக் கலவையால் நகங்கள் அலங்கரித்திருக்குமே  அதுவும் கூட ஒரு  கலையா என்ன? உன்னையே நினைத்துக் கொண்டு படுத்திருப்பதால்  தானோ என்னவோ ... கொசுக்கடி கூட  தென்றலென இனிக்குதடி....!!!!  உன் கண்கள் பார்த்த நாளிலிருந்தே  என் தூக்கத்தை மறந்து வெறும்  துக்கத்தையே சுமக்கிறேனே...!!!!  அன்று காதல் மொழி பேசிய தொலைபேசி  கூட இன்று தொல்லைபேசி ஆனதே  உன் குரல் கேட்காத போது....!!!!!  உனக்கு வேறு திருமணம் ஆனது தெரிந்தும்  இன்றும் ஆயிரம் முத்தங்கள் உன்  புகைப்படத்தில் பதிக்கிறேனே ஒருவேளை  இது கூட காதல் தானோ ?????

நிலா பெண்ணே...!!

நிலா பெண்ணே...!!  நீ என் கண்களில் விழுந்து  தொலைந்ததால் தானோ என்னவோ  தினமும் என்னை அழ வைக்கிறாய்....!!!  சூரியனை மேகம் தினமும்  தழுவி செல்வதைப் போல தான்  நீயும் என்னை தழுவி சென்றாய் அப்போது...!!!  காதல் தோல்வி கவிதைகளாய் வந்து  இதயத்தை உடைக்கிறாய் இப்போது...!!!  என் கண்கள் சொரியும் கண்ணீருக்கும்  கூட தெரிந்த என் காதல் உனக்கு  தெரியாமல் போனது தான் விதியின் சூட்சுமம்...!!!  தூண்டிலில் சிக்கி உயிருக்குப் போராடும்  மீனைப் போல நானும் காற்றில் அசையும்  உந்தன் தாவணியில் சிக்கித் தவிக்கிறேன்...!!!  பாறை மேல் விழுந்து சிதறிப் போகும்  மழைத் துளி போல என்னுள் விழுந்து  சிதறிப் போனாயே பெண்ணே...!!!  என் உயிர் கூட நீராவியாய் போகிறதே  அன்பே... உந்தன் கொலுசொலி எந்தன்  செவியில் சரசமீட்டும் போது....!!!  இப்போதும் நீ என்னை நினைகிறாயா  என்று தெரியாமல் உன்னுள் புதையுண்டு  கிடக்கிறேனே ... தீவின் நடுவில் தஞ்சம்  அடைந்ததாகவே நினைக்கிறேன் கண்ணே...!!!  உனக்காக நான் எழுதி கசக்கி எறியும்...

நடைபிணம்

வாடிப் போவதற்கு நான்  பூக்களாக பிறந்திருக்க வேண்டும்; மானிடனாய் பிறந்ததால் தான் என்னவோ காதலனாய் உன்னுள் புதையுண்டு கிடக்கிறேன்...!!!  நீ என்னுள் பூத்ததன் பெயர் காதல் என்றால்,  செடியில் பூக்கள் பூப்பதும் காதல் தான்....!!  சிறந்த கதைகளுக்கு கூட முடிவு  இல்லாமல் போகிறது...!!  நம்மையே காதலித்த நம் காதலுக்குமா  முடிவு இல்லாமல் போய் விட்டது...!!!!  முளைத்த பிறகும் வாடி அழிந்து போகும்  பயிரைப் போல...  நம்முள் முளைத்த நம் காதலையும்  கருகிப் போக செய்தாயே...!!!  இறப்பதற்கு பல காரணங்கள் இருக்கும் போதும்  உன்னுடன் வாழ்வதற்கான காரணம்  தேடி அலைந்து தோற்று போனவன் நான் ......!!!  தோல்வி எனும் புத்தகம் இருப்பதால் தான்  வெற்றி எனும் காதலி கவிதை எழுதுகிறாள்; ஆனால் , நீ மட்டும் தான் தோல்வி புத்தகத்தில்  தோல்வி முடிவுரைகள் பதிக்கிறாய்....!!  தேய்பிறையாய் தொலைந்து போனாயே பெண்ணே...!!  திக்கு தெரியாமல் தேடி அலைகிறேன...

FEEDBACK

Name

Email *

Message *