வெண்பிறையே ...!!!
நிலாமுகமே....!!!
சாய்ந்து அசைந்தாடும் முல்லைச் சுடரே....!!!
முத்தமிழும் சங்கமிடும் தமிழ்க் கூற்றே....!!!
நினைக்கிறேன் உனையே தினமும்....!!!
கிடைக்குமா இதயத்தில் புகலிடம்....!!!
"நீ" ,"நான்" எனும் ஒருமையில் இருப்பதை,
"நாம்" எனும் பன்மையாய் அமைக்க
தருவாயா இதயத்தில் அகலிடம்....!!!
நீ வேண்டாம் என்றதும் மடியவே
தமிழன்னையை சாட்சி வைத்து
அவள் பாத மடியில் காத்திருக்கிறேன்
முடிவில்லா ஆசையில்...... !!!!!

Comments