Skip to main content

Posts

Showing posts from 2020

PAYMENT

GOOGLE PAY jackbrawin@oksbi Mobile No: 7094905125 PAYMENT STRAIGHT THROUGH BANK NAME: BRAWIN Y.J ACCOUNT NUMBER: 39230100005518 IFSC: BARB0KUZHIT BRANCH: KUZHITHURAI BANK OF BARODA PAYTM 7094905125

அன்புள்ள காதலிக்கு

அன்புள்ள காதலிக்கு, ஆசையுடன் உன் காதலன் நான் எழுதும் கடிதம்; என்னை என்று விட்டு சென்றாயோ.. அன்றே இழந்தேன் என் இன்பமெல்லாம்; மீளா துயரில் துடிக்கிறேன்;  துவள்கிறேன்; நீ எதையுமா உணராமல் இருக்கிறாய்? என்ன? ஏது? என்று கேளாமல் எப்படி  உன்னால் இருக்க முடிகிறதோ  எனக்கே தெரியவில்லை......!!! காலையில் எழுந்தால், கைப்பேசியில் உன் குறுந்தகவல்  காணாமல் திகைக்கிறேன்; தினமும் தூக்கம் விளித்து  உண்ண மறக்கிறேன்; மனதில் இருக்கும் உன் உருவம் நினைத்து  வயிற்றை நிறைத்துக் கொள்கிறேன்; கல்லூரியில் வைத்து என் வகுப்பென்று எண்ணி  வேறு பிரிவில் சென்று கோமாளியாய்  ஏமாந்து நிற்கிறேன்; மாலையில் வீட்டு டியூஷனில்  உன் பெயர் வைத்த பெண்ணின்  பெயரை அழைக்கும் போது  கண்கள் ஏனோ கலங்கத் தான் செய்கிறது; அப்போது என் மனம் கட்டுப்பாட்டை இழந்து துள்ளி எழும்; ஆனால் பல்லைக் கடித்து அடக்க வேண்டியதாய் உள்ளது; உன்னை மறக்கத் தான் நினைக்கிறேன்; ஆனால் தோற்று போகிறேன்; புத்தகத்தை எடுத்து படிக்கலாம் என்று திறந்தால்; எழுத்து எல்லாம் உன் முகமாய் இருந்தால்; கவலையுடன் புத்தகத்தை மூடி வைப்ப...

சொல்லாத காதல்

எத்தனை முறை கேட்டிருப்பேன்  என்னை நேசிக்கிறாயா என்று; எத்தனை முறை அலைந்திருப்பேன் ஒரு முறையேனும் சொன்னாயா உன் நேசத்தை; காலத்தின் கொடுங்காற்று நம்மை எதிரெதிரே எறிந்தது; இரண்டு மகாமகம் கழித்து  இரவு நேர ரயில் பயணத்தில்  எதிர்பாராமல் சந்தித்தோம்; நேரெதிரே இருந்தும் கூட  மவுனம் மட்டுமே நம் பாஷையானது; சிலர் வாழ்க்கையில்  விளையாட்டு வினையாகும்;  நம் வாழ்க்கையில்  விதியே விளையாடியது; நள்ளிரவு கடந்தும்  கண்கள் மூட மறுத்தது; ரயிலின் சப்தத்தைவிட  உன் இதயத்துடிப்பின் ஓசைதான்  அதிகமாய் கேட்டது; இது நாள் வரை புரியாமல் இருந்த புதிருக்கு  அன்று விடை கிடைத்தது; நீயும் என்னை காதலித்ததை  காலம் கடந்து உணர வைத்தது;

விவசாயி மகன் எழுதிய கண்கலங்க வைக்கும் கடிதம்

மண்வெட்டி பிடித்தவனை மாப்பிள்ளையாக  சமுதாயம் மறுக்கிறது; விவசாயி என சொல்லிக் கொண்டு  பெண் பார்க்க முடியவில்லை; எதிர் காலத்தில் எதை உண்ணுமோ  இந்த சமுதாயம் எனக்கு தெரியவில்லை; திருமணத்தில் நான் விளைவித்த  பொருட்கள் மட்டும் வேண்டும் என்றார்கள்; மணமேடைக்கு மண் கறை படிந்த  என்னை வேண்டாம் என்றார்கள்; எந்த நேரத்திலும் வெளுக்காத என் விவசாயம்  திருமண நேரத்தில் வெளுத்து போனதே சாயம்; இது என்றுமே என் மனதில ஆறாத காயம்; விளைவித்தவன் பிச்சைகாரன்! விலை வைத்தவன் இலட்சக்காரன்! இரண்டு கோடிகள் கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்! இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் தேசத்தில்! இருநூறு கோடிகள் கொடுத்து கிரிக்கெட் அணியை ஏலமேடுக்கும் எங்கள் தேசத்தில்! இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய் தள்ளுபடி செய்யும் எங்கள் தேசத்தில்! இருபதாயிரம் கோடிகளை பொழுது போக்க ஒதுக்கும் எங்கள் தேசத்தில்! இரண்டு இலட்சம் கோடிகளுக்கு அலைக்கற்றை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்! எங்களையோ அல்லது நாங்கள்  விளைவிக்கும் பொருளையோ  ஏலமெடுக்கத் தான் எவருமில்லை; இ...

FEEDBACK

Name

Email *

Message *