எத்தனை முறை கேட்டிருப்பேன்
என்னை நேசிக்கிறாயா என்று;
எத்தனை முறை அலைந்திருப்பேன்
ஒரு முறையேனும் சொன்னாயா
உன் நேசத்தை;
காலத்தின் கொடுங்காற்று
நம்மை எதிரெதிரே எறிந்தது;
இரண்டு மகாமகம் கழித்து
இரவு நேர ரயில் பயணத்தில்
எதிர்பாராமல் சந்தித்தோம்;
நேரெதிரே இருந்தும் கூட
மவுனம் மட்டுமே நம் பாஷையானது;
சிலர் வாழ்க்கையில்
விளையாட்டு வினையாகும்;
நம் வாழ்க்கையில்
விதியே விளையாடியது;
நள்ளிரவு கடந்தும்
கண்கள் மூட மறுத்தது;
ரயிலின் சப்தத்தைவிட
உன் இதயத்துடிப்பின் ஓசைதான்
அதிகமாய் கேட்டது;
இது நாள் வரை புரியாமல் இருந்த புதிருக்கு
அன்று விடை கிடைத்தது;
நீயும் என்னை காதலித்ததை
காலம் கடந்து உணர வைத்தது;

Comments