Skip to main content

என் நிழல்




நீ என் இதயம் என்று சொல்ல மாட்டேன்;

ஏன் என்றால் இதயம் கூட ஒரு நாள் நின்று விடும் என்பதால்;

நீ என் மூச்சுக் காற்று என்றும் சொல்ல மாட்டேன்;

ஏன் என்றால் மூச்சுக் கூட ஒரு நாள் நின்று விடும் என்பதால்;

நீ என் உயிர் என்றும் சொல்ல மாட்டேன்;

ஏன் என்றால் உயிரும் ஒரு நாள் பிரிந்து விடும் என்பதால்;

நீ என் கண் என்றும் சொல்ல மாட்டேன்;

ஏன் என்றால் கண் கூட ஒரு நாள் மங்கி விடும் என்பதால்;

நீ என் முடி என்று கூட சொல்ல மாட்டேன்;

ஏன் என்றால் முடி கூட ஒரு நாள் உதிர்ந்து விடும் என்பதால்;

நீ என் இரத்தம் என்று கூட சொல்ல மாட்டேன்;

ஏன் என்றால் இரத்தமும் ஒரு நாள் சிந்திவிடும் என்பதால்;

ஆனால்,

உன்னை என் நிழல் என்பேன்;

ஏன் என்றால்,

நிழல் மட்டும் தான் இறுதி வரை என் கூடவே இருக்கும்.

உன்னால் என் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் கிடைத்து விட்டது.

Comments

Guru said…
Even the shadow go off on the night ... the only thing that stays with u forever is yourself ... nothing else can be with u forever ...
Unknown said…
mmm..... k machi

FEEDBACK

Name

Email *

Message *