பார்த்த போது
என்னை நான் மறந்தேன்
ஒரு நொடியில்;
உன்னுடன் பேசும் போது
என் இதயத்தை
இழந்தேன்;
உன் மேல் காதல் கொண்டு
என் வாழ்க்கை நீ தான்
என்றதால்
உறவுகளின் நன்மதிப்பை
இழந்தேன்;
என் அம்மாவிடம்
நீ தான் என் காதலி
என்று சொன்னதால்
அம்மாவின் அன்பை
இழந்தேன்;
உன் மீது அன்பு,
பாசம்,
காதல் வைத்ததால்,
உடன்பிறப்புகளின் உறவினை
இழந்தேன்;
உன்னையே நினைத்துக்
கொண்டு இருந்ததால்,
என் உணர்வுகளை
இழந்தேன்;
ஊண், உறக்கம் இழந்தேன்;
உன்னையே மனதில்
சுமந்து திரிந்ததால்
குடும்ப சுமையை
இழந்தேன்;
நீ என் இதயத்தை
தினம் தினம் நோகடிப்பதால்
என் பசியினை
இழந்தேன்;
நீ என் வகுப்பறையில்
இல்லாததால்
என் படிப்பை
இழந்தேன்;
உனக்காக காத்திருந்து காத்திருந்து
என் வாழ்நாளை இழந்தேன்;
உன்னை தினம் பார்க்க வேண்டும்
ஆனால்,
பார்வை இருந்தும்,
பார்வை இழந்துள்ளேன்;
ஆனால்,
நீயோ உயிரை இழக்கச் சொல்கிறாய்;
அதுவே உன் ஆசை என்றால்,
உனக்காக இழப்பேன் என் உயிரை;
நான் மண்ணை விட்டுப் பிரிந்தால்;
என்னைப் போல் யார் காப்பான் உன்னை;
அதனால் தான் உயிருடன் வாழ்கிறேன்;
உனக்காக !

Comments