Skip to main content

அன்புள்ள காதலிக்கு


அன்புள்ள காதலிக்கு,

ஆசையுடன் உன் காதலன் நான் எழுதும் கடிதம்;

என்னை என்று விட்டு சென்றாயோ..

அன்றே இழந்தேன் என் இன்பமெல்லாம்;

மீளா துயரில் துடிக்கிறேன்; 

துவள்கிறேன்;

நீ எதையுமா உணராமல் இருக்கிறாய்?

என்ன? ஏது? என்று கேளாமல் எப்படி 

உன்னால் இருக்க முடிகிறதோ 

எனக்கே தெரியவில்லை......!!!

காலையில் எழுந்தால்,

கைப்பேசியில் உன் குறுந்தகவல் 

காணாமல் திகைக்கிறேன்;

தினமும் தூக்கம் விளித்து 

உண்ண மறக்கிறேன்;

மனதில் இருக்கும் உன் உருவம் நினைத்து 

வயிற்றை நிறைத்துக் கொள்கிறேன்;

கல்லூரியில் வைத்து என் வகுப்பென்று எண்ணி 

வேறு பிரிவில் சென்று கோமாளியாய் 

ஏமாந்து நிற்கிறேன்;

மாலையில் வீட்டு டியூஷனில் 

உன் பெயர் வைத்த பெண்ணின் 

பெயரை அழைக்கும் போது 

கண்கள் ஏனோ கலங்கத் தான் செய்கிறது;

அப்போது என் மனம் கட்டுப்பாட்டை இழந்து துள்ளி எழும்;

ஆனால் பல்லைக் கடித்து அடக்க வேண்டியதாய் உள்ளது;

உன்னை மறக்கத் தான் நினைக்கிறேன்;

ஆனால் தோற்று போகிறேன்;

புத்தகத்தை எடுத்து படிக்கலாம் என்று திறந்தால்;

எழுத்து எல்லாம் உன் முகமாய் இருந்தால்;

கவலையுடன் புத்தகத்தை மூடி வைப்பேன்; 

எழுத்து எல்லாம் உன் உருவமாய் வந்து 

சித்திரவதை செய்யும்;

சரி,

படிக்கத் தான் முடியவில்லை 

நண்பர்களுடன் வெளியே ஊர் சுற்ற சென்றாலும் 

வழிக் கடைகளில் உன் பெயர் வைத்த பலகைகள் 

என்னுயிரைக் கொல்லும்;

தூங்காத இரவுகளாய் என் கண்கள் பனிக்கிறது;

நான் என்ன செய்ய?

நீ திரும்பி வருவாயா? மாட்டாயா?

இப்படிக்கு

உன் நினைவில் வாழும்

உன்னால் வெறுத்து ஒதுக்கப்பட்ட

ஓர் இலைச் சருகு.

Comments

Anonymous said…
Very Nice

FEEDBACK

Name

Email *

Message *